புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 1:09 AM IST (Updated: 26 March 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகரப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என டவுன் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெட்டிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இளங்கோவன் (வயது47), கருணாநிதி(51), கிருஷ்ணமூர்த்தி(49), ஜாபர்அலி (52) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story