சிறப்பு பட்டா மாறுதல் முகாம்


சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
x
தினத்தந்தி 26 March 2022 1:16 AM IST (Updated: 26 March 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே சிறப்பு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காரியாபட்டி, 
நரிக்குடி ஒன்றியம் என்.முக்குளம் ஊராட்சிக்குட்பட்ட வீரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டா மாறுதல் மற்றும் பெயர் திருத்தலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பட்டா மாறுதல் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் வீரக்குடி, என்.முக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தம் 13 மனுக்கள் பெறப்பட்டன. இதில்  4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.மேலும் அதற்கான சான்றிதழ்களை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவக்குமார் பயனாளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மண்டல துணை தாசில்தார் சரவணக்குமார், நரிக்குடி வருவாய் ஆய்வாளர் லட்சுமிதேவி, கிராம நிர்வாக அலுவலர் ரூபாவதி, என்.முக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் இப்ராஹிம், கிராம உதவியாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story