கும்பகோணம் கோர்ட்டில் நீதிபதி ஆய்வு
கும்பகோணம் கோர்ட்டில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மரக்கன்று நட்டார்.
கும்பகோணம்:
கும்பகோணம் கோர்ட்டில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மரக்கன்று நட்டார்.
ஆய்வு
தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதணன் கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கும்பகோணம் கோர்ட்டு வளாகத்தில் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், கூடுதல் சார்பு நீதிபதிகள் மும்தாஜ், பாண்டிமகாராஜா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதர் ஆகியோர் மதுசூதணனை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் கோர்ட்டு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுப்புற சுகாதார நடவடிக்கைகள், கழிவறை வசதிகள், வக்கீல்கள் மற்றும் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வக்கீல்கள் சங்கத்தலைவர் ராஜசேகர், செயலாளர் தரணிதரன், அரசு வக்கீல்கள் முத்துஉத்திராபதி, கவிதாமோகன்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story