மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 1:21 AM IST (Updated: 26 March 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

பண்டாரவாடையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாபநாசம்:
பாபநாசம் தாலுகா பண்டாரவாடை பஸ் நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாபநாசம் ஒன்றியச்செயலாளர் அஸ்ரப்அலி தலைமை தாங்கினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் முகமது மகரூப் கலந்து கொண்டு பேசினார். ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story