உளுந்து செடிகளை காயவைக்கும் பணி தீவிரம்


உளுந்து செடிகளை காயவைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 March 2022 1:46 AM IST (Updated: 26 March 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

நாஞ்சிக்கோட்டை பகுதியில் உளுந்து செடிகளை காயவைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

நாஞ்சிக்கோட்டை:
நாஞ்சிக்கோட்டை, ஈச்சங்கோட்டை, மருங்குளம், ஏழுப்பட்டி, விளார், நெல்லு பட்டு, கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, நத்தம், நடுவூர், கொல்லாங்கரை,  காசாநாடுபுதூர், கண்டிதம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கார்த்திகை மாதம் கடைசியில் உளுந்து செடி சாகுபடி செய்யப்பட்டது. 
தற்போது உளுந்து செடிகளில் உள்ள காய்கள் நன்கு முதிர்ந்துள்ளது. இந்த செடிகளை வயல்களில் இருந்து பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகி்ன்றனர். பின்னர் வயல்களில் இருந்து பறித்து வந்த உளுந்து செடிகளை சாலைகள் மற்றும் வீடுகளில்  காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Next Story