மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்


மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 March 2022 2:51 AM IST (Updated: 26 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அரசாணையின்படி ரூ.2.08 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிட்டுள்ளார். எனவே 2021-22-ம் ஆண்டிற்கான விருதிற்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே சமுதாய அமைப்புகளிடம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து 6 காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்ய வேண்டும். பின்னர் தகுதியான சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை உரிய ஆவணங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்கும் இறங்குவரிசைபடி பட்டியல் தயார் செய்து முதல் மதிப்பெண் வாங்கிய சமுதாய அமைப்புகளை மாவட்ட அளவில் திட்ட இயக்குனர் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் விண்ணப்பித்த சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை நேரில் ஆய்வு செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 15-ந் தேதிக்குள் அனுப்பிட வேண்டும். வட்டார அளவில் விண்ணப்பங்கள் பெறுதல் (5 நாட்கள்) இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தல் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலும், மாவட்ட அளவில் கருத்துருக்களை ஆய்வு செய்தல், மாவட்ட குழுவுக்கு பரிந்துரைத்தல் ஆகியவை ஏப்ரல் 7-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், மாவட்ட அளவிலான கூட்டம் நடத்துதல், மாநில விருதுக்கு பரிந்துரைத்தல் ஆகியவை ஏப்ரல் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், மாநில அலுவலகத்திற்கு கருத்துருக்கள் அனுப்பிட கடைசி நாள் ஏப்ரல் 21-ந்தேதி ஆகும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Next Story