ஏரியில் மூழ்கி பெண் பலி


ஏரியில் மூழ்கி பெண் பலி
x
தினத்தந்தி 26 March 2022 2:55 AM IST (Updated: 26 March 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ராஜம்மாள்(வயது 55). இவர் நேற்று அதிகாலை அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். அப்போது ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய ராஜம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். காலையில் அப்பகுதிக்கு சென்றவர்கள் அதை பார்த்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார், ராஜம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story