மஞ்சுவிரட்டு;காளைகள் முட்டி 10 பேர் காயம்


மஞ்சுவிரட்டு;காளைகள் முட்டி 10 பேர் காயம்
x
தினத்தந்தி 26 March 2022 3:01 AM IST (Updated: 26 March 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சுவிரட்டு;காளைகள் முட்டி 10 பேர் காயம்

கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள வி.புதூரில் உள்ள முத்துப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்ப்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மஞ்சுவிரட்டை காண்பதற்கு ஏராளமானோர் குவிந்தனர்.விபுதூரில் இருந்து கிராமத்தினர் ஜவுளி எடுத்து கொண்டு ஊர்வலமாக மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு நடைபெறும் தொழுவத்திற்க்கு வந்து வழிபட்டனர். பின்னர் கிராம கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் அனைத்து மாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மஞ்சுவிரட்டை காண்பதற்கு டிராக்டர், மினிவேன், கார் மீது அமர்ந்து பாதுகாப்பாக பார்த்தனர். மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story