ஆலங்குளம்: தேசிய ஊரக தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சி


ஆலங்குளம்: தேசிய ஊரக தொழிலாளர்கள்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 26 March 2022 3:19 AM IST (Updated: 26 March 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நெட்டூர் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேசிய ஊரக தொழிலாளர்கள் நேற்று ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
உடனே அவர்களிடம் ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்ைத நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஊரக தொழிலாளர்கள், யூனியன் தலைவரிடம் மனு வழங்கி விட்டு கலைந்து சென்றனர்.

Next Story