சங்கரன்கோவில் ரத வீதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற உள்ளதால், ரத வீதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற உள்ளதால், ரத வீதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேரோட்டம்
பிரசித்தி பெற்ற சைவ- வைணவ தலங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்கி, 10 நாட்கள் நடைபெற உள்ளது. 9-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், ஆடித்தவசு திருவிழா தேரோட்டம் நடத்தப்படவில்லை.
சேதமடைந்த சாலைகள்
இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், ரத வீதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. தெற்கு ரத வீதி, கீழ ரத வீதிகளில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டதால் சேதமடைந்து காணப்படுகிறது.
சித்திரை திருவிழா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளதால், சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story