பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்- கொலையா? போலீஸ் விசாரணை


பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்- கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 26 March 2022 3:36 AM IST (Updated: 26 March 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான நிலையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அது கொலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாளவாடி
பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான நிலையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அது கொலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
உல்லாச வீடியோ வெளியானது 
  தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 35).  அதே பகுதியில் பெட்டிக்கடையும்  நடத்தி வந்தார். திருமணம் ஆகாதவர். தனியாக வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  
இதற்கிடையே பசுவண்ணா ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அவமானமாகிவிட்டதே என்று பசுவண்ணா கவலையுடன் காணப்பட்டார். 
தூக்கில் பிணம்
இந்தநிலையில் தன்னுடைய தோட்டத்து வீட்டில் பசுவண்ணா நேற்று முன்தினம் இரவு தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். 
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். 
ெகாலையா?
தூக்கில் பிணமாக தொங்கிய பசுவண்ணாவின் 2 கைகளிலும் காயங்கள் இருந்தன. அதனால் யாராவது அவரை அடித்து கொைல செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? அல்லது அவர் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது தெரியவில்லை.
 இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story