முதலீட்டு பணத்தை திரும்ப தரக்கோரி வங்கிக்குள் கையை அறுத்துக்கொண்ட ஸ்டூடியோ உரிமையாளர்-தம்மம்பட்டியில் பரபரப்பு


முதலீட்டு பணத்தை திரும்ப தரக்கோரி வங்கிக்குள் கையை அறுத்துக்கொண்ட ஸ்டூடியோ உரிமையாளர்-தம்மம்பட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 March 2022 3:44 AM IST (Updated: 26 March 2022 3:44 AM IST)
t-max-icont-min-icon

முதலீட்டு பணத்தை திரும்ப தரக்கோரி, ஸ்டூடியோ உரிமையாளர் வங்கிக்குள் கையை அறுத்துக்கொண்ட சம்பவம் தம்மம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தம்மம்பட்டி:
முதலீட்டு பணத்தை திரும்ப தரக்கோரி, ஸ்டூடியோ உரிமையாளர் வங்கிக்குள் கையை அறுத்துக்கொண்ட சம்பவம் தம்மம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டூடியோ உரிமையாளர்
திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 43), ஸ்டூடியோ உரிமையாளர். கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆனந்தன், அந்த வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளார். 
அப்போது அங்கிருந்த வங்கி மேலாளர், ஆனந்தனின் பணம் ஷேர் மார்க்கெட்டில் போடப்பட்டு உள்ளதாகவும், அதில் தொடர்ந்து பணம் கட்டாததால் நஷ்டம் ஏற்பட்டு மூன்றில் ஒரு பங்கு பணமே இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. அந்த பணத்தை நான் டெபாசிட் தான் செய்தேன் என்று கூறிய ஆனந்தன், தனது பணத்தை வங்கிபணியாளர்கள் ஷேர் மார்க்கெட்டில் போட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். 
கையை அறுத்துக்கொண்டார்
இதுகுறித்து நேற்று முன்தினம் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் வங்கியில் தனக்கு பணம் வேண்டும், முடிவு தெரியாமல் நான் செல்ல மாட்டேன் என ஆனந்தன் மற்றும் அவருடைய மனைவி பாலாமணி வங்கிக்குள்ளேயே அமர்ந்துக்கொண்டு வெளியேற மறுத்துள்ளனர். 
இந்த நிலையில் நேற்று இரவு  7 மணி அளவில் வங்கி மேலாளர் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த போலீசார், ஆனந்தனிடம் வங்கியை விட்டு வெளியே வருமாறும் நாளை (இன்று) பேசிக்கொள்ளலாம் என அவரிடம் சமாதானம் பேசினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தன், தான் வைத்திருந்த கத்தியால் கையை அறுத்துக்கொண்டார். 
இதில் காயம் அடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தம்மம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story