வாழப்பாடியில் வாலிபரிடம் ரூ.89 ஆயிரம் மோசடி


வாழப்பாடியில் வாலிபரிடம் ரூ.89 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 26 March 2022 4:02 AM IST (Updated: 26 March 2022 4:02 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில் வாலிபரிடம் ரூ.89 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:
வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 30). அவருடைய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் பணம் முதலீடு செய்தால் அது இரட்டிப்பாக கிடைக்கும் என்றும், அதற்கான லிங்கும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி ராகவன் அந்த லிங்கிக்குள் சென்று சில தகவல்களை பதிவு செய்ததுடன் 4 தவணையாக ரூ.89 ஆயிரத்து 400 செலுத்தினார்.
ஆனால் ஒரு மாதம் கழித்தும் அவருக்கு இரட்டிப்பு பணம் தொகை கிடைக்கவில்லை. மேலும் அந்த செயலி போலியானது என்பது தெரியவந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராகவன் இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story