பணத்தகராறில் நண்பர் அடித்துக்கொலை; விவசாயி கைது


பணத்தகராறில் நண்பர் அடித்துக்கொலை; விவசாயி கைது
x
தினத்தந்தி 26 March 2022 4:09 AM IST (Updated: 26 March 2022 4:09 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் தாலுகாவில், பணத்தகராறில் நண்பனை அடித்துக் கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்

மண்டியா: மத்தூர் தாலுகாவில், பணத்தகராறில் நண்பனை அடித்துக் கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். 

பணத்தகராறு

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா நகரகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கேகவுடா. இவரது மகன் ஆனந்த்(வயது 46). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுரேஷ் என்பவரும் நண்பர்கள் ஆவர். இருவருக்கும் இடையே பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இருவரும் மதுகுடித்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே மீண்டும் பணத்தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கைகலப்பும் நடந்தது.

அடித்துக்கொலை

இதில் கடும் கோபம் அடைந்த சுரேஷ், ஆனந்தை தாக்கினார். அதில் ஆனந்த் நிலைகுலைந்து கீழே விழுந்தார். ஆத்திரம் அடங்காத சுரேஷ், ஆனந்தை சரமாரியாக தாக்கினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மத்தூர் போலீசார் சுரேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

Next Story