வழக்கில் தண்டனை கிடைத்துவிடும் என பயந்து தொழிலாளி தற்கொலை
வழக்கில் தண்டனை கிடைத்துவிடும் என பயந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த நைனாம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரும், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசை சேர்ந்த இளம்பெண்ணும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அந்த பெண் மைனர் என்பதால் பெண்ணின் பெற்றோர் சூரம்பட்டிவலசு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. மேலும் இந்த வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என பயந்து தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்று விட்டார். எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை முருகேசன் எடப்பாடி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story