வள்ளியூரில் 291 பயனாளிகளுக்கு நகை தள்ளுபடிக்கான சான்றிதழ் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்


வள்ளியூரில் 291 பயனாளிகளுக்கு நகை தள்ளுபடிக்கான சான்றிதழ் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
x
தினத்தந்தி 26 March 2022 4:41 AM IST (Updated: 26 March 2022 4:41 AM IST)
t-max-icont-min-icon

291 பயனாளிகளுக்கு நகை தள்ளுபடிக்கான சான்றிதழ் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

வள்ளியூர்:
தமிழக அரசு கூட்டுறவு கடன் சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு 5 பவுன் வரை கடன் தொகை தள்ளுபடி வழங்க ஆணை பிறப்பித்து இருந்தது. அதன்படி ராதாபுரம், நாங்குநேரி தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கிய 291 பயனாளிகளுக்கு 89 லட்ச ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழ்களையும், நகைகளையும் வழங்கும் விழா வள்ளியூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அழகிரி தலைமை தாங்கினார். வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவி ராதா, துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பதிவாளர் முத்துசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு, நகை தள்ளுபடிக்கான சான்றிதழ்களையும், நகைகளையும் வழங்கி பேசினார். அவர் பேசுகையில், “நாங்குநேரி உயர் நுட்ப தொழில் பூங்கா விரைவில் தமிழக முதல்-அமைச்சரால் மீண்டும் புத்துயிர் பெற இருக்கிறது. நெல்லை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மேலாண்மை இயக்குனர் மன்னராஜா, மாவட்ட கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story