தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய அ.ம.மு.க. பிரமுகர் கைது
பூந்தமல்லியில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய அ.ம.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி, ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வருபவர் மில்டன் ராஜதுரை (வயது 45). தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்து வருகிறார். பூந்தமல்லி அ.ம.மு.க. நகர செயலாளராக இருந்து வருபவர் ஜாகீர்அப்பாஸ். இறைச்சி கடை நடத்தி வரும் ஜாகீர் அப்பாஸ், ராஜதுரை வீட்டிற்கு இறைச்சி வினியோகம் செய்து வந்த நிலையில், அவரது மனைவியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இருப்பதாக கூறி ராஜதுரையிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜாகீர் அப்பாஸ், ராஜதுரையின் தலையில் கல்லால் பலமாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜதுரை பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், ஜாகீர் அப்பாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போலீசார், ஜாகீர் அப்பாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story