பஸ்சில் ஆபத்தான பயணம்


பஸ்சில் ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 26 March 2022 4:56 PM IST (Updated: 26 March 2022 4:56 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் வந்தவாசியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு செல்லும் போது வந்தவாசி, நடுகுப்பம், தெள்ளார், தேசூர், மகமாய்திருமணி, வழியாக வெடால் கிராமத்திற்கு தடம் எண்:2 என்ற ஒரே ஒரு அரசு டவுன் பஸ் மட்டும் இயக்கப்படுவதால் ஏராளமான பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் தினமும் பயணம் செய்கிறார்கள். 

எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்கள் எந்த சிரமமுமின்றி பயணம் செய்வதற்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story