திருச்சி, வயலூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை
சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் திருச்சி, வயலூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி, மார்ச்.27-
சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் திருச்சி, வயலூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி தில்லைநகரில் இன்று நடந்த அரசு நிகழ்ச்சியில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
துபாய் பயணம்
முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு கொண்டு வரவும், தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காகவும், தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். ஆனால் அவர் என்ன நோக்கத்துக்காக சென்றார் என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜெயக்குமார் ஆண்டவனுக்கு தெரிந்து தான் திருச்சிக்கு கையெழுத்திட வந்துள்ளார். எங்களை விமர்சிப்பதில் பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை முந்திக்கொள்கிறார். அ.தி.மு.க.வால் பேசமுடியவில்லை. எங்கள் மீது குற்றச்சாட்டு கூறவில்லை என்றால் அண்ணாமலையால் கட்சி நடத்த முடியாது. அவர் மட்டுமல்ல யார் விமர்சனம் செய்தாலும் மக்கள் தி.மு.க. பக்கம் உள்ளனர்.
ஜங்ஷனுக்கு உயர்மட்ட பாலம்
திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி வடிவத்தை எட்டியுள்ளது. ரூ.2 கோடியே 80 லட்சம் கொடுத்து திட்ட அறிக்கை தயாரிப்பதால், மண் பரிசோதனை உள்ளிட்ட எல்லா பரிசோதனைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு நடைபெறும். ஒரு நிமிடத்தில் 300 பஸ்கள் நிற்கவும், பல லட்சம் மக்கள் வந்து செல்வார்கள் என்பதால் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட பஸ்நிலையமாக அது அமையும்.
திருச்சி மாவட்டத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் சீரமைக்கும் பணி, காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு ஏற்கனவே ரூ.90 கோடி என்று நினைக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய கூட்டுகுடிநீர் திட்டம்
திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்த கூடிய காரணத்தினால் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். திருச்சி மாவட்டத்தை ஒரு முன்மாதிரி மாவட்டமாக கொண்டுவருவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெறும்.
தனியார் நிறுவனம் வாயிலாக திருச்சியில் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பால் விலை, பஸ் கட்டண உயர்வு போன்றவை அந்தந்த காலகட்டங்களில் தகுந்தாற்போல் உயர்வது இயல்பான விஷயம். அதை நாங்கள் திணிக்கவில்லை.
திருச்சிக்கு மெட்ரோ ரெயில் சேவை
கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் விட்டுள்ளது. சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் திருச்சி மலைக்கோட்டை - வயலூர் - ஸ்ரீரங்கம் - சமயபுரம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை இணைத்து மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை கொண்டு வருவதற்கு நாங்கள் எடுத்துக்கூற உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவிகளுக்கு கவுன்சிலிங்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவர்கள் வேண்டும் என்றே பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச்செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் பஸ்சில் பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம் தொடர்பாக தனியார் அமைப்பின் வாயிலாக அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளின் தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் முதல்கட்டமாக ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு ரூ.6.89 கோடி செலவில் புதிய கட்டிடம் மற்றும் கூடுதல் வசதிகள் உருவாக்கப்படும்.

Related Tags :
Next Story