அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம்- மந்திரி வர்ஷா கெய்க்வாட்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 March 2022 5:57 PM IST (Updated: 26 March 2022 5:57 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை, 
அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் உத்தரவிட்டு உள்ளார்.
கேமரா கட்டாயம்
மராட்டிய பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் சட்டசபையில் பேசும்போது கூறியதாவது:-
 மராட்டியத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் பல்வேறு விதமான கல்வி வாரிய பள்ளிகள் என 65 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. பாலியல் துன்புறுத்தல்களை கண்டறிய இந்த அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.
 விசாரணைக்கு தேவைப்படும் போது பார்க்கும் வகையில், கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கும் ஹார்டு டிரைவையும் நாங்கள் கட்டாயமாக்க உள்ளோம்.
சக்தி சாவித்ரி கமிட்டி
 இதேபோல பள்ளிகள் மாணவ, மாணவிகள், அங்கன்வாடி ஊழியர், டாக்டர், ஆசிரியை, முதல்வர் அடங்கிய 'சக்தி சாவித்ரி' கமிட்டியை அமைக்க வேண்டும். கமிட்டி உறுப்பினர்களின் பெயர்கள் பள்ளி வளாகத்தில் எழுதப்பட்டு இருக்க வேண்டும். இந்த கமிட்டியின் செயல்பாடை பள்ளி கல்வி கமிஷனர் மேற்பார்வை செய்வார்.
 இவ்வாறு அவர் பேசினார்.

Next Story