ரெயில்வே கார்டு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே கார்டு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 6:06 PM IST (Updated: 26 March 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே கார்டு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச்.27-
ரெயில்வே கார்டு பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்தும், டிராலி பேக் அறிமுகப்படுத்துவதை எதிர்த்தும், பழைய லைன் பாக்ஸ் முறை தொடர வலியுறுத்தியும் அகில இந்திய ரெயில்வே கார்டுகள் கவுன்சில் (ஏ.ஐ.ஜி.சி.) சார்பில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி கோட்ட தலைவர் ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை கோட்ட செயலாளர் காமேஸ்வரன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய சங்க துணை தலைவர்கள் முருகேசன், ரங்காச்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே கார்டுகள் பணி செய்ய தேவையான கொடிகள், கை சமிக்ஞை விளக்குகள், எல்.வி. போர்டு, மினுக்கும் சிவப்பு எச்சரிக்கை விளக்கு போன்ற 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சட்டப் புத்தகங்கள், பாதுகாப்புக் குறிப்பேடுகள் மற்றும் படிவங்களை உடன் எடுத்துசெல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story