ஆதித்தனார் கல்லூரியில் தபால் தலை- நாணய கண்காட்சி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தபால் தலை மற்றும் நாணய கண்காட்சி நடந்தது.
திருச்செந்தூர், மார்ச்.27-
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில் தபால் தலை மற்றும் நாணய கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் காகித பணம் ஆகியவை இடம் பெற்றன. கல்லூரி மாணவர்கள் பல்வேறு நாடுகளின் பழங்கால நாணயங்களையும் மற்றும் தபால் தலைகளையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.
முதுகலை ஆங்கிலத்துறை 2-ம் ஆண்டு மாணவர் ராஜா பாரத் வைத்திருந்த பழங்கால நாணயங்களும், 2-ம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் அமல்ராஜ் வைத்திருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த நாணயங்களும், இளங்கலை பொருளியல் 3-ம் ஆண்டு மாணவர் சாரோன் சுவிட்சன் ஆகியோர் வைத்திருந்த தபால் தலைகளும் பார்வையாளர்களை கவர்ந்தது. கல்லூரி செயலர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம், ரமேஷ் மற்றும் பல்வேறு துறையின் தலைவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை நாணய சேகரிப்பு மன்ற இயக்குனர் ஜஸிந்த் மிஸ்பா, தபால்தலை சேகரிப்பு மன்ற இயக்குனர் முருகேஸ்வரி மற்றும் மன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் அணி 43, 44 சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் ஆறுமுகநேரி முத்துக்கிருஷ்ணாபுரம், சீனந்தோப்பு ராஜமணியபுரம் ஆகிய கிராமங்களில் தொடங்கியது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன் முகாமை தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் தொடக்க உரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கதிரேசன் வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆசாத் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story