அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்


அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
x

கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தமிழரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர்கள் மோகன்தாஸ், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரபாகரன், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை காளிதாஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் தெய்வேந்திரன், எல்.பி.எப் கட்டுமான தொழிலாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், இந்திய கட்டுமான தொழிற்சங்க நகர செயலாளர் அந்தோணி செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச் சொத்துக்களையும் மத்திய அரசு விற்கக்கூடாது, மின் துறையை தனியார் மயமாக்கும் சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28, 29-ந் தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதையொட்டி கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நாளை காலை 10 மணிக்கு மறியல் போராட்டம் நடத்தவும், நாளை மறுநாள் மாதாங் கோவில் ரோடு படித்துறை முன்பு மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Next Story