மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் சோதனை


மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 26 March 2022 7:39 PM IST (Updated: 26 March 2022 7:39 PM IST)
t-max-icont-min-icon

மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் சோதனை

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதுமலை புலிகள் காப்பக(உள் மண்டலம்) துணை இயக்குனர்(பொறுப்பு) கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் முதுமலை வனத்துறையினர் தொரப்பள்ளி, கக்கநல்லா, மசினகுடி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் மோப்ப நாய் டைகர் உதவியுடன் இன்று திடீரென பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு வருகிறார்களா? என சோதனை செய்தனர். சில வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்குடி வனச்சரகர் விஜயன் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story