உடன்குடியில் சொட்டுநீர் பாசனத்துடன் முருங்கை விவசாயம் மும்முரம்


உடன்குடியில் சொட்டுநீர் பாசனத்துடன் முருங்கை விவசாயம் மும்முரம்
x
தினத்தந்தி 26 March 2022 7:45 PM IST (Updated: 26 March 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதியில் சொட்டுநீர் பாசனத்துடன் முருங்கை விவசாயம் மும்முரமாக நடந்து வருகிறது.

உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட 18 பஞ்சாயத்து பகுதிகளிலும் செம்மண் நிறைந்த பகுதி அதிகமாகவே உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடுமையான வறட்சியில் சிக்கிய பனை, தென்னை மரங்கள் அழிந்தது. காட்டு செடிகளும், உடை மரங்களும் தானாக வளர்ந்து, விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு உவர்ப்பு நிலமாக மாறியதால் இந்த நிலங்களை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.
கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்து, குளம் குட்டைகள் எல்லாம் முழுமையாக நிரம்பியது. சுமார் 40 வருடமாக கண்டுபிடிக்கப்படாத குளங்களை கண்டுபிடித்து மழை தண்ணீரால் நிரப்பட்டது. இதனால் நல்ல சுவையான தண்ணீர் உள்ள விவசாய நிலமாக மாறியது. அதனால் தற்போது இப்பகுதியில் விவசாயம் தீவிரமாக நடக்கிறது. இப்பகுதியில் உள்ள காட்டு செடிகள், உடை மரங்களை முழுமையாக வெட்டி அப்புறப்படுத்திவிட்டு குறைந்த காலங்களில் வருமானம் தரும் முருங்கை விவசாயத்தை பயிரிட்ட விவசாயிகள் முனைப்புடன் செயல்படுகின்றனர். மேலும் ஆட்கள் வைத்து தண்ணீர் பாய்ச்சுவதற்கு பதில், செம்மணல் தேரியில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து முருங்கை விவசாயம் செய்கின்றனர்.

Next Story