கும்மிடிப்பூண்டி அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது கிளிக்கோடி கிராமம். இங்கு வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 60). சினிமா தியேட்டர் ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி ரேவதியுடன்(54) மாடியில் உள்ள வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ரேவதி அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை நைசாக கழற்றி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ரேவதிக்கு நேற்று காலை தான் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி திருட்டு போனது தெரிந்தது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story