சேலம் மாவட்டத்தில் 26-வது கட்ட மெகா முகாமில் 35,775 பேருக்கு கொரோனா தடுப்பூசி


சேலம் மாவட்டத்தில் 26-வது கட்ட மெகா முகாமில் 35,775 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 26 March 2022 9:37 PM IST (Updated: 26 March 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 26-வது கட்ட மெகா முகாமில் 35 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 26-வது கட்ட மெகா முகாமில் 35 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மெகா முகாம்கள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் 26 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு முதல் தவணையும், 19 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசின் உத்தரவுப்படி 12 முதல் 14 வயதினருக்கான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அவரவர் பள்ளிகளிலும், பள்ளி செல்லா சிறுவர், சிறுமிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. 
இதுதவிர, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
35,775 பேருக்கு தடுப்பூசி
இந்தநிலையில், மாவட்டம் முழுவதும் இன்று 26-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்து 922 பேருக்கும், சேலம் மாவட்ட புறநகர் பகுதியில் 19 ஆயிரத்து 846 பேருக்கும், ஆத்தூர் ஊரக பகுதியில் 12 ஆயிரத்து 7 பேருக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 3 மாதங்களில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால் இறந்திருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story