கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தல்
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர், கம்பம், சின்னமனூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்தநிலையில் தமிழக-கேரள எல்லையான குமுளி போலீஸ் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி வந்த கேரள அரசு பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், அந்த பஸ்சில் 5 மூட்டைகளில் தேங்காய் மட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை பார்த்ததும் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதற்குள் சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு 500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்திச் சென்றது தொியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் குமுளி வழியாக ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களது சாப்பாடு பாத்திரங்கள் மற்றும் கூடைகளில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்று ரேஷன் அரிசி கடத்துவது ெதரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story