சேலம் அருகே வெவ்வேறு இடங்களில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது
சேலம் அருகே வெவ்வேறு இடங்களில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,:
சேலம் அருகே வெவ்வேறு இடங்களில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆடு திருட்டு
சேலம் அருகே பெரியவீராணத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆடுகளை கட்டிபோட்டு விட்டு வீட்டின் வெளியே படுத்திருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரு ஆட்டை நைசாக அவிழ்த்து திருடி சென்றுவிட்டனர். ஆடு திருட்டு போனதை கண்டு விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த லியாண்டர் (21), மேயர் நகரை சேர்ந்த சபரிகுமரன் (21) ஆகியோர் ஆட்டை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடு பறிமுதல் செய்யப்பட்டது.
3 பேர் கைது
இதேபோல் கருப்பூர் வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (40) என்பவரின் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடி சென்றுவிட்டதாக கருப்பூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் ஆடு திருடியது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (43), அப்பு என்கிற கணபதி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணபதியை வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் ஆடுகளை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story