சுட்டெரிக்கும் வெயில் பழனி கிரிவீதியில் நிழற்பந்தல் அமைப்பு


சுட்டெரிக்கும் வெயில்  பழனி கிரிவீதியில் நிழற்பந்தல் அமைப்பு
x
தினத்தந்தி 26 March 2022 10:30 PM IST (Updated: 26 March 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பழனி கிரிவீதியில் நிழற்பந்தல் அமைக்கப்படுகிறது.

பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. கடந்த வாரம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். திருவிழா முடிந்த பின்னரும் தற்போது பக்தர்கள் பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோவிலில் தரிசனம் செய்தபின் கிரிவீதிகளை சுற்றி வருகின்றனர். இந்நிலையில் பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வகையில் வெயில் அடித்து வருகிறது.
இதையடுத்து பக்தர்கள் நலனுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன விரிப்பு விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலனுக்காக வடக்கு கிரிவீதியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story