மகாமாரியம்மன் கோவில் திருவிழா


மகாமாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 26 March 2022 10:35 PM IST (Updated: 26 March 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமானில், இன்று பாடைக்கட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

வலங்கைமான்;
வலங்கைமானில், இன்று பாடைக்கட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். 
மகா மாரியம்மன் கோவில்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்  குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டு தலமாகவும் சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 13-ந் தேதி முதல் காப்பு கட்டுதலும்,  20-ந் தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடந்தது. விழா நாட்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.  பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நோய் குணமடைய வேண்டி மகா மாரியம்மனை வேண்டிக் கொள்வர். 
பாடைக்காவடி திருவிழா
நோயிலிருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல பாடையில் படுக்க வைத்து  இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்யப்படும். பின்னர் அந்த பாடை காவடியை அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கிக் கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மகா மாரியம்மன் கோவிலை மும்முறை சுற்றி வலம் வருவார்கள். நோயுற்றவர்களுக்கு மறு உயிர் வழங்கிய அம்மனுக்கு பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வே பாடைக்காவடி திருவிழா என அழைக்கப்படுகிறது. 
இன்று நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவையொட்டி பக்தர்கள் பாடைக்காவடிகள், பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய வண்ணம் உள்ளனர். இதனால் மகாமாரியம்மன் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
 விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
விஜயகுமார் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன்,  சுகுணா, கருணாநிதி, விஜயா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி மயிலாடுதுறை பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. 
கண்காணிப்பு கேமராக்கள்
2 ஆண்டுகளுக்கு பிறகு வலங்கைமான் மகாமாாியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா இன்று நடைபெற உள்ளதால் விழாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் வருவாய் துறை, இந்து சமய அறநிலையத் துறை, தீயணைப்பு துறை, போலீசார், சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகம், நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் நெரிசல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஹரிஹரன் தலைமையில் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.



Next Story