திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம் செய்தார்.
திருக்கடையூர்:-
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். முன்னதாக தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ரவிசங்கர் குருஜிக்கு பிரசாதம் வழங்கினார்.
Related Tags :
Next Story