3½ கிலோ மீட்டர் தூரம் பரவி கிடக்கும் கடல் சேறு


3½ கிலோ மீட்டர் தூரம் பரவி கிடக்கும் கடல் சேறு
x
தினத்தந்தி 26 March 2022 11:12 PM IST (Updated: 26 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் கடற்கரையில் 3½ கிலோ மீட்டர் தூரம் கடல் சேறு பரவி கிடப்பதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் கடற்கரையில்  3½ கிலோ மீட்டர் தூரம் கடல் சேறு பரவி கிடப்பதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடற்கரையில் பரவி கிடக்கும் சேறு
வேதாரண்யம் கடற்கரை  தூய்மையாகவும், நடந்து செல்வதற்கு ஏதுவாக கட்டாந்தரை போல் காட்சியளித்து வந்தது. ஆனால் சுனாமிக்கு பிறகு ஆற்காட்டுதுறையில் கட்டப்படும் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு தென்புறம்  கோடியக்கரை முனங்காடு வரை சுமார் 3½ கிலோ மீட்டர் தூரம் கடற்கரையில் கடல் சேறு பரவி கிடக்கிறது. 
இதனால் அமாவாசை உள்ளிட்ட நாட்களிலும், கோவில் திருவிழா நாட்களிலும் பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாமலும்,, இறந்தவர்களின் சாம்பலை கடலில் கொண்டு சென்று விட முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விசாக காற்று 
இதுபோன்ற நிலை 50 ஆண்டுகளாக இருந்ததே இல்லை. இந்தோனேசியா, அந்தமான் ஆகிய நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவதாலும்,  வெடிகுண்டுகள் வெடித்து சோதனை செய்வதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டு கடல் சேறு வெளியேறுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். 
 வைகாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை தெற்கு காற்று என்றழைக்கப்படும் விசாக காற்று வீசும். இந்த காலத்தில் தான் இந்த  சேறு முழுவதும் கடலுக்குள்  இழுத்து செல்லப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story