தர்மபுரி அருகே விஷம் குடித்த வாலிபர் சாவு
தர்மபுரி அருகே விஷம் குடித்த வாலிபர் இறந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுண்டி. தொழிலாளி. இவருடைய மகன் சந்துரு (வயது 18). 9-ம் வகுப்பு வரை படித்த இவர் வீட்டில் கால்நடைகளை பராமரிக்கும் வேலையை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். பெற்றோர் அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story