சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டுக்கு முகூர்த்தகால் நடும் பணி
சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டுக்கு முகூர்த்தகால் நடும் பணிநடைபெற்றது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஐந்துநிலை நாடு சேகரம் சிங்கம்புணரி கிராமத்தில் வருகின்ற 30-ந்ேததி மாபெரும் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைெபறுகிறது. இதைெயாட்டி சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட திடலில் மஞ்சுவிரட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியது. இதை தொடர்ந்து முகூர்த்தக்கால் ஊன்றும் பணி நேற்று தொடங்கியது. முன்னதாக கிராமத்தின் மஞ்சுவிரட்டு பொறுப்பாளர்கள் இணைந்து முகூர்த்தக்கால் நட்டு பூஜை செய்தனர். இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு 160 ஏக்கர் நிலத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர் தாயுமானவன், மற்றும் சமூக ஆர்வலர் குகன், சத்தியன், தினேஷ், தொழிலதிபர்கள் ஆர்.எம்.எஸ் சரவணன், குழந்தைவேல், எம்.எம்.மில் குபேரன் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story