குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவில் திருவிழா
குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் மாவிளக்கு படைத்து, கிடா வெட்டி வழிபட்டனர்.
குளித்தலை,
பேராளகுந்தாளம்மன் கோவில்
குளித்தலையில் பிரசித்தி பெற்ற பேராளகுந்தாளம்மன் கோவில் உள்ளது. காவல் தெய்வமாக வழிபடப்படும் இக்கோவில் சுவாமி எல்லை பிடாரி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் திருவிழா கடந்த 16-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 20-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதையடுத்து 22-ந் தேதி காலை குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அன்று இரவு இக்கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
கிடாவெட்டு நிகழ்ச்சி
கடந்த 23-ந் தேதியில் இருந்து குளித்தலை நகரப்பகுதி மற்றும் குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் பிடாரி அம்மனின் வீதியுலா நடைபெற்றது. அம்மன் சென்ற வீதிகளில் பொதுமக்கள் இளநீர் படைத்து பூஜை செய்து வழிபட்டனர். இந்தநிலையில் நேற்று குளித்தலை நகரப்பகுதிக்குள் அம்மன் வீதியுலா மற்றும் கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது சாமி சென்ற வீதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவிளக்கு படைத்து வழிபட்டனர். இதையடுத்து இரவு கோவிலுக்குள் அம்மன் குடிபுகுதல் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story