பயிற்சி காவலர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி
பயிற்சி காவலர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி நடைபெற்றது.
கரூர்,
தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் காவல் பயிற்சியில் உள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தில் 99 காவலர்கள் பயிற்சி காவலராக கடந்த 14-ந்தேதி முதல் பயிற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் அடிப்படை கணினி பயிற்சி அளிக்க அறிவுறுத்தினார். அதன்பேரில் மாவட்ட காவல்துறை மற்றும் ஜெயராம் கல்லூரி நிர்வாகமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் உள்ள கணினி ஆய்வகத்தில் பயிற்சி காவலர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தொடங்கி வைத்து கணினி பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
Related Tags :
Next Story