நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 27 March 2022 12:24 AM IST (Updated: 27 March 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள சித்தம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 29). லாரி டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த கோபால் மகள் வனிதா (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வனிதா பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
இதனால் திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் நேற்று தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசினர். இதையடுத்து காதல் ஜோடியை ரமேஷ் குடும்பத்தினருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story