ஜவுளி அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு


ஜவுளி அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 March 2022 12:28 AM IST (Updated: 27 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி ஜவுளி அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர், 
ஜவுளி அதிபர்
கரூர் அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவர் வையாபுரி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கோபாலிடம் அறிமுகம் செய்துகொண்ட 3 நபர்கள் தாங்கள் சென்னையை சேர்ந்த பிரபல நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தங்கள் நிறுவனத்தின் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் எனவே தங்களுக்கு கடன் தேவைப்பட்டால் குறைந்த வட்டிக்கு தருவதாக கூறியுள்ளனர்.
3 பேர் மீது வழக்கு
இதையடுத்து கோபால் ரூ.25 லட்சம் கடன் கேட்டுள்ளார். இதனைதொடர்ந்து அந்த தொகைக்கான வட்டி உள்ளிட்டவைகளுக்காக ரூ.2 லட்சம் தரவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய கோபால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறியபடி கடன் பெற்று தரவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோபால் இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஜவுளி அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த குமார் என்கிற முருகன், ரமேஷ், ஜெகன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Next Story