இலவச பயண அட்டை வழங்கும் முகாம் நாளை தொடக்கம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான இலவச பேருந்து சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிறத 31-ந் தேதி வரை நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் இலவச பயணஅட்டை நேரடியாக புதுப்பித்து வழங்கப்படும்.
இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story