நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு
நடுக்கடலில் மீனவர் திடீரென இறந்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் முருகநாதன் (வயது 50), முருகன், முருகான்டி, சுப்பிரமணி ஆகிய 4 மீனவர்களும் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்த மீனவர் முருகநாதனுக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்காக படகில் இருந்த மற்ற மீனவர்கள் ராமேசுவரம் கரை திரும்பினர்.ஆனால் அந்த மீனவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து ராமேசுவரம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story