இறந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


இறந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 March 2022 1:28 AM IST (Updated: 27 March 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பையூரில் இறந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டி, 

திருவாடானை தாலுகா, திருவெற்றியூர் புதுப்பையூர் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 35 வயது பெண் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜான்பீட்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.அதனை தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னிலையில் பாதையில் அமைக்கபட்டிருந்த வேலி அகற்றப்பட்டது.அதனை தொடர்ந்து அந்த வழியாக இறந்த பெண் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த பொதுமக்களின் அமைதி கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. 



Next Story