மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 47). கூலி தொழிலாளி. இவரது வீட்டில் ஐஸ் வியாபாரியான பாதமுத்து என்பவர் தனது மோட்டார்சைக்கிளுக்கு சார்ஜ் போடுவது வழக்கம். அதேபோல் சார்ஜ் போடுவதற்காக மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த மோட்டார்சைக்கிளில் ஜெயராஜ் கை வைத்தார். அதில் எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை, அவரது மனைவி மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஜெயராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயராஜ் மனைவி பத்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story