91 ஆசிரியர்கள் கைது
91 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற உள்ள பொது கந்தாய்வில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதற்காக மதுரையில் உள்ள கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப் படவில்லை. அதைதொடர்ந்து மதுரை அண்ணாபஸ்நிலையம் அருகே உள்ள கள்ளர்சீரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தை ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் இணை இயக்குனர் செல்வராஜை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பலனில்லை. 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 91 பேரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story