ஹிஜாப், காஷ்மீர் பைல்ஸ் விவகாரத்தில் சர்ச்சை கருத்து; கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது மேலிடம் அதிருப்தி


ஹிஜாப், காஷ்மீர் பைல்ஸ் விவகாரத்தில் சர்ச்சை கருத்து; கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது மேலிடம் அதிருப்தி
x
தினத்தந்தி 27 March 2022 2:10 AM IST (Updated: 27 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப், காஷ்மீர் பைல்ஸ் விவகாரத்தில் சர்ச்சை கருத்து கூறிய கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது மேலிடம் அதிருப்தி தெரிவித்துள்ளது

பெங்களூரு: உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. கர்நாடகத்தில் அடுத்து ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும்படி கர்நாடக தலைவர்களுக்கு, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், ஹிஜாப் விவகாரத்திலும், காஷ்மீர் பைல்ஸ் சினிமா விவகாரத்திலும், கர்நாடக பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது தொடர்பாக கர்நாடக காஙகிரஸ் தலைவர்கள் கூறி கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் எந்த விஷயம் குறித்தும் பகிரங்கமாக பேச வேண்டாம் என்று மேலிடம் எச்சரித்து இருக்கிறது. இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜேவாலா, டி.கே.சிவக்குமார், சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story