உகாதி பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்-கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்


உகாதி பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்-கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்
x
தினத்தந்தி 27 March 2022 2:28 AM IST (Updated: 27 March 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

உகாதி பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது

பெங்களூரு: உகாதி பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

600 பஸ்கள் இயக்கம்

கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உகாதி பண்டிகை வருகிற 2-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து வருகிற 1, 2-ந் தேதிகளில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாப்புரா, சிருங்கேரி, ஒரநாடு, தாவணகெரே, 

உப்பள்ளி, தார்வார், பெலகாவி

விஜயாப்புரா, கோகர்ணா, சிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பல், யாதகிரி, பீதர் ஆகிய இடங்களுக்கும், திருப்பதி, விஜயவாடா, ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் இயங்குகிறது. மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, உன்சூர், பிரியப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால்நகர், மடிகேரி ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மதுரை, சென்னை

சாந்திநகரில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு மதுரை, கும்பகோணம், சென்னை, கோயம்புத்தூர், திருச்சிக்கும், கேரளாவில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பெங்களூரு விஜயநகர், ஜெயநகர் 4-வது பிளாக், ஜாலஹள்ளி கிராஸ், ராஜாஜிநகர் நவரங் தியேட்டர், மல்லேசுவரம் 18-வது கிராஸ், பனசங்கரி, ஜீவன்பீமாநகர், ஐ.டி.ஐ. கேட், கங்காநகர், கெங்கேரி சாட்டிலைட் டவுனில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, மங்களூரு, குந்தாப்புரா, சிருங்கேரி, ஒரநாடு, குக்கே சுப்பிரமணியா, தர்மஸ்தாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் செல்கிறது.

691 டிக்கெட் கவுண்ட்டர்கள்

பெங்களூருவில் இருந்து செல்லும் 600 பஸ்களும் 3-ந் தேதி பெங்களூருவுக்கு திரும்பி வருகிறது. இந்த பஸ்களில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள்  இணையதள முகவரியை தெரிந்து கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்காக கர்நாடகம், பிற பகுதிகளில் 691 டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவுக்கு திரும்பி வரும் பஸ்கள் தாலுகா, மாவட்ட பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும். 
இந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story