முறைகேட்டில் சிக்கிய நெல்லை தணிக்கை அலுவலக கண்காணிப்பாளர் பணிநீக்கம்


முறைகேட்டில் சிக்கிய நெல்லை தணிக்கை அலுவலக கண்காணிப்பாளர் பணிநீக்கம்
x
தினத்தந்தி 27 March 2022 2:39 AM IST (Updated: 27 March 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

முறைகேட்டில் சிக்கிய நெல்லை தணிக்கை அலுவலக கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்

நெல்லை:
ரூ.12.30 லட்சத்தை மோசடி செய்து முறைகேட்டில் சிக்கிய நெல்லை தணிக்கை அலுவலக கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ரூ.12.30 லட்சம் முைறகேடு
நெல்ைல மாவட்டம் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் லயோலா ஆரோக்கியதாஸ்.
இவர் ராதாபுரம் யூனியன் கஸ்தூரிெரங்கபுரம் பஞ்சாயத்தில், பணி செய்யாத ஒப்பந்ததாரர் கணக்கில் ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் வரவு ைவத்து மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
பணி நீக்கம்
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு விசாரணை நடத்தி வந்தார். மேலும் லயோலா ஆரோக்கியதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நெல்லையில் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் முறைகேட்டில் சிக்கிய லயோலோ ஆரோக்கியதாசை பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து, நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

Next Story