நகைக்கடன் தள்ளுபடி வழங்கியதில் முறைகேடு: ராதாபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம்
நகைக்கடன் தள்ளுபடி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், ராதாபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்
நெல்லை:
நகைக்கடன் தள்ளுபடி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், ராதாபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சங்க தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முறைகேடு
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக ஆறுமுகம் என்பவரும், செயலாளராக நம்பிகுமார் என்பவரும் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சேரன்மாதேவி சரக துணைப்பதிவாளர் விசாரணைக்கு நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி உத்தரவிட்டார்.
பணி இடைநீக்கம்
சேரன்மகாதேவி சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் விசாரணை நடத்தி நேற்று மண்டல இணைப்பதிவாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில், ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் நம்பிகுமாரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து இணைப்பதிவாளர் அழகிரி உத்தரவிட்டார்.
மேலும், கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகத்தையும் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story