பெண் விவகாரத்தில் வாலிபரை கொல்ல முயற்சி; ரவுடி உள்பட 5 பேர் கைது
பெண் விவகாரத்தில் வாலிபரை கொல்ல முயன்ற ரவுடி உள்பட 5 பேர் கைது செய்யப்படடனர்
பெங்களூரு: பெங்களூரு ஞானபாரதி பகுதியில் வசித்து வரும் ஸ்ரீகாந்த் என்ற வாலிபரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயுதங்களால் தாக்கி மர்மநபர்கள் கொல்ல முயன்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்தை கொல்ல முயன்றதாக நாயுடு என்கிற அருண்குமார், யஷ்வந்த், கார்த்திக், விஷால், சஞ்சய் ஆகிய 5 பேரை ஞானபாரதி போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பெண் விவகாரத்தில் இந்த கொலை முயற்சி நடந்தது தெரியவந்தது. அதாவது அருண்குமாருக்கு திருமணமாகி கணவரை பிரிந்த மஞ்சுஸ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல வசித்து வந்துள்ளனர். அந்த பெண் ஏற்கனவே ஸ்ரீகாந்த்துடனும் திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து உள்ளார். ஆனாலும் ஸ்ரீகாந்த் தன்னுடன் வாழும்படி மஞ்சுஸ்ரீக்கு தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார், ரவுடியான கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஸ்ரீகாந்த்தை கொல்ல முயன்றது தெரியவந்து உள்ளது.
Related Tags :
Next Story