திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆய்வு


திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2022 3:04 AM IST (Updated: 27 March 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆய்வு செய்தார்.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் துணை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல ஆணையர் மதுமதி, கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அரசின் பல்வேறு துறைகள் வாரியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, செலவு செய்யப்பட்ட தொகை, பயனாளிகளின் விவரம், நடைபெறும் மற்றும் முடிவுற்ற பணிகள் விவரம், பயனாளிகளின் குறைகள் மற்றும் கருத்துகள் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வுக்கு சென்று வந்த துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் அவர் பயனாளிகளின் நலனுக்காக தமிழக அரசின் மூலம் கூடுதல் திட்டங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். ஆய்வில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story